இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்கள் எண்ணிலடாங்கா அளவில் பெருகியுள்ளது. வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்குவது முதல் தொழில் வரி கட்டுவது உள்பட அனைத்து பணிகளையும் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் முடித்துவிடலாம். ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நம் கையில் இருந்தால் ஒரு வீட்டில் உள்ள அனைத்து முக்கிய பொருட்களும் இருப்பதற்கு சமம். இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் அடுத்த பயனாக ஒரு பெண் கருவுற்று இருக்கின்றாரா? என்பதை கூட ஸ்மார்ட்போன் மூலம் கண்டுபிடித்துவிட முடியும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போனில் தற்போது ‘பயோ சென்சிங்’ என்ற ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ் மூலம் நம் உடலில் உள்ள அனைத்து நோய்களின் அறிகுறிகளை அறிந்து கொள்வதோடு, நீரிழிவு நோய் கர்ப்பத்துக்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியும் என இதன் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆப்ஸை வடிவமைத்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் இரத்தம், சிறுநீர், உமிழ்நீர், ஆகியவற்றை சோதனை செய்துதான் கர்ப்பம் உள்பட பல்வேறு நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலே போது நம் உடலில் உள்ள அனைத்து நோய் மற்றும் மற்ற அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம்.