2016 ஆம் ஆண்டை ஆக்கிரமிக்கப் போகும் வினோத ஸ்மார்ட் கைப்பேசிகள்

smartphone_list-350x250

பல்வேறு தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அடுத்த வருடம் Samsung மற்றும் LG நிறுவனங்கள் OLED தொழில்நுட்பத்தினை உடையதும் மடிக்கக்கூடியதுமான திரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் Samsung நிறுவனம் Snapdragon 820 Processor உடையதும் பிரதான நினைவகமாக 3GB RAM உடையதுமான ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

தவிர இக் கைப்பேசியில் அகற்ற முடியாத மின்கலம் மற்றும் நிலையான சேமிப்பு நினைவகம், microSD கார்ட் மூலம் அதிகரிக்கக்கூடிய நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகவும் இக் கைப்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply