ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு. அரசு தகவல்

ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு. அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்காமல் உள்தாள் ஒட்டியே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில்  வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் பொருட்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த பணிகள் தாமதமாகிக்கொண்டே வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் இந்த ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், ரேஷன் அட்டை தாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இந்த ஸ்மார்ட் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பையில் இருந்து தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. பின்னர் தாலுக்கா வாரியாக எல்லா ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஸ்வைப் செய்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். நாம் வாங்கிய பொருள் என்னவென்று எஸ்எம்எஸ்ஸாக பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வந்துவிடும். ரேஷன் கடையில் உள்ள இருப்பு குறித்தும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply