ஒட்டும் சார்ஜர்
ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜர் ஏற்ற பல நவீன முறைகள் வந்துவிட்டது. இப்போது ஒயர் இல்லாத சார்ஜர் முறை வந்துவிட்டது என்றாலும் அதை டேபிள் அல்லது சமதள இடங்களில் வைத்துதான் பயன்படுத்த முடியும். இந்த சார்ஜரை தேவைக்கு ஏற்ப சுவர்களில் ஒட்ட வைத்துக் கொள்ளவும் முடியும். சுவரில் ஒட்டவைத்து அதிலேயே செல்போனுக்கு சார்ஜர் ஏற்றிக் கொள்ளலாம். செல்போன் கீழே விழுந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை.
ஸ்மார்ட் கிச்சன்
கிச்சனில்தான் சமைப்பதற்கான வசதிகள் இருக்கும் என்பதை மாற்றுகிறது இந்த ஸ்மார்ட் கிச்சன். தண்ணீர் கொதிக்க வைக்க, காய்களை வேகவைக்க அடுப்பு தேட வேண்டியதில்லை. ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டியை தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் வைத்து ஆன் செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் சமைத்து விடலாம். தண்ணீரை கொதிக்க வைக்க நாம் இப்பொழுது பயன்படுத்தி வரும் வாட்டர் ஹீட்டர் தொழில்நுட்பத்தின் நவீன வடிவம்தான் இது. வணிக ரீதியாக பயன்படுத்த இந்த கருவி உதவும்.