சாம்சங் கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

images (6)

சாம்சங் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் AT & Tல் பிரத்தியேகமாக கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போன், AT & T வலைத்தளத்தில் இருந்தும் மற்றும் நிறுவனத்தின் சார்ந்த சில்லறை விற்பனையாளர் கடை வழியாக ஜூன் 12ம் தேதி முதல் தொடங்கி கிடைக்கும். அமெரிக்காவின் வெளியே சாதனம் கிடைப்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அசல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை போலவே, இந்த சாம்சங் கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனிலும் ஒரே மாதிரியான குறிப்புகளை கொண்டுள்ளது. ஆனால், இதில் தண்ணீர் தடுப்பு (30 நிமிடங்கள் 1.5 மீட்டர் வரை) தூசி ஆதாரம், மற்றும் அதிர்ச்சி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக IP68 ரேட்டிங் கொண்டுள்ளது. மேலும் அதிர்வு, மிகக் கடுமையான உச்ச வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் அதிக உயரம் போன்றவற்றிற்காக MIL-STD-810G ஸ்டாண்டர்ட் உள்ளது.  

சாம்சங் கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் TouchWiz UI ஸ்கின் கொண்ட ஆண்ட்ராய்டு 5.

0.2 லாலிபாப் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 577ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1440×2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.1 இன்ச் குவாட் ஹச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 1.5GHz அக்டா கோர் Exynos 7420 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத் v4.10, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிஎஸ்எம், 3ஜி மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவை வழங்குகிறது.

இந்த கைப்பேசியில் 3500 பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றம் இது கமோ ஒயிட், கமோ ப்ளூ வண்ண வகைகளில் வருகிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S6 ஆக்டிவ் ஸ்மார்ட்போன்:

  • 1440×2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.1 இன்ச் ஹச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
  • 3ஜிபி ரேம்,
  • 1.5GHz அக்டா கோர் Exynos 7420 ப்ராசசர்,
  • 16 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத் v4.10,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஜிஎஸ்எம்,
  • 3ஜி,
  • 4ஜி எல்டிஇ,
  • ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப்,
  • 3500 பேட்டரி.

Leave a Reply