அனைத்து இந்திய மொழிகளிலும் திருக்குறள். அமைச்சர் ஸ்மிருதி இராணி உறுதி

அனைத்து இந்திய மொழிகளிலும் திருக்குறள். அமைச்சர் ஸ்மிருதி இராணி உறுதி
Smriti Irani
உலக பொதுமுறையாக கருதப்படும் திருவள்ளுவர் எழுதிய தமிழ் நூலான திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை முன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரையில் இருந்து வந்த சுமார் 5000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 133 பேர் செய்யப்பட்டு அவர்களை கெளரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கயநாயுடு, ஸ்மிருதி இராணி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இராணி, ‘திருக்குறள் ஏற்கனவே இந்திய மற்றும் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருப்ப்பினும் இன்னும் மொழி பெயர்க்கப்படாத இந்திய மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் அவர் திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார்.

Leave a Reply