பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் நடிகை திடீரென வழுக்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தொலைக்காட்சி நடிகை சிம்ரிட்டி இரானி போட்டியிடுகிறார். முதலில் எளிதில் ராகுல்காந்தி வெற்றி பெற்றுவிடுவார் என்று கணித்த வேளையில் தற்போது போட்டி மிகவும் கடுமையாக உள்ளதாக அமேதி தொகுதியில் இருந்து செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை சிம்ரிட்டி இரானி, மேடையில் இருந்து கீழே இறங்கியபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கீழே விழுந்த அவரை பாரதிய ஜனதா தொண்டர்கள் தூக்கிவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகையிடம் ஒருசிலர் சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாரதிய ஜனதா தொண்டர்கள் மறுத்துள்ளனர்.
[embedplusvideo height=”300″ width=”600″ editlink=”http://bit.ly/1e9mTvd” standard=”http://www.youtube.com/v/cpQNUySRcgk?fs=1″ vars=”ytid=cpQNUySRcgk&width=600&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8315″ /]