எஸ்.எம்.எஸ் மூலம் வங்கிக்கணக்கு பாஸ்வேர்டு. HDFC வங்கி அறிமுகம்.

hdfcஇதுவரை ஆன்லைன் வங்கிக்கணக்கு பாஸ்வேர்டு, மற்றும் ஏ.டி.எம் பாஸ்வேர்டு ஆகியவற்றை தபால் மூலம் அனுப்பி வந்த வங்கிகள் தற்போது இந்த வகை பாஸ்வேர்டுகளை வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப தயாராகி வருகின்றன.

முதல்கட்டமாக HDFC வங்கி இந்த முறையை ஆரம்பித்துள்ளது. HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான வங்கிக் கணக்கு பாஸ்வேர்டை தபால் மூலம் அனுப்புவதற்கு பதில் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப தடை உள்ளதால், அந்த மாநித்தில் மட்டும் தபாலில் அனுப்பப்படும் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் பாஸ்வேர்டுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும் பாஸ்வேர்டுகளை ஒரு முறை பயன்படுத்திவிட்டு பிறகு வாடிக்கையாளர் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

Leave a Reply