நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி

mylpg

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி “இண்டேன்’,”பாரத்’ ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை “டைப்’ செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நேரடி மானியத் திட்ட முறை கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் வரும் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பங்களை அளித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அறிய முடிந்தது.

இந்த நிலையில், கைப்பேசி மூலம் நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:

 

தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்                                       இண்டேன்    பாரத்கேஸ்

எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை

(17 இலக்க குறியீட்டு எண்) தெரிந்துகொள்ள                        INDANE LPGID    LPGID

நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா

என்பதை அறிய                                                                                INDANE DBTLSTATUS    DBTLSTATUS

மானிய விலையில் எரிவாயு உருளை

எண்ணிக்கை அறிய                                                                       INDANE LPGQUOTA      LPGQUOTA

நேரடி மானியத் திட்ட முன்வைப்பு,

மானியத்தொகை விவரங்களை அறிய                                  INDANE SUBSIDY    LPGSUBSIDY

Leave a Reply