சீனா: உடல் பாகங்களில் மறைத்து ஆப்பிள் ஐபோன்களை கடத்திய இளைஞர்கள் கைது
ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் கடந்த வாரம் வெளியன நிலையில் இந்த போனை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஒருசிலரை சீன காவல்துறையினர் கைது செய்தனர். சுமார் 15 நபர்களிடம் இருந்து 400 ஐபோன்கள் ஒருசில மணி நேரத்தில் பிடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விமானத்தில் ஒரு மொபைல் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உண்டு. ஒன்றுக்கு மேல் கொண்டு சென்றால் அது குற்றமாக கருதப்படும். இந்நிலையில் ஒருசிலர் தங்கள் உடல்பாகங்களில் மறைத்து 6 முதல் 10 ஐபோன்கள் வரை கொண்டு சென்றதாகவும், அவர்களில் பலர் கஸ்டம்ஸ் துறையினர்களால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சீன விமான நிலையங்களில் இதுவரை பிடிபட்ட ஐபோன்களின் மதிப்பு £344,787 என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐபோன் 7 இதுவரை வெளிவராத நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.