அமேசானை வீழ்த்த பிளிப்கார்ட்-ஸ்னாப்டீல் எடுத்த அதிரடி முடிவு
இ காமர்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வரும் ஸ்னாப்டீல் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முன்னணி இடத்தில் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இணணயாக அமேசான் நிறுவனமும் உள்ளது. இந்த நிலையில் எதிர் எதிர் துருவங்களாக போட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
ஜப்பானை சேர்ந்த SoftBank இதற்கான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, இவ்விரு நிறுவனங்களும் இணையும்போது, சாஃப்ட்பேங்க் இதன் வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான முதலீட்டை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரு நிறுவனங்களுடன் சாஃப்ட்பேங்க் நிறுவனமும் இணையவுள்ளதால் இதன் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவனத்தை, எளிதாக வீழ்த்த முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.