மேகமூட்டம் காரணமாக சென்னையில் தெரியாத சூரிய கிரகணம். மக்கள் ஏமாற்றம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்துள்ள நிலையில் இன்று காலை 6.22 முதல் சென்னை மக்கள் சூரிய கிரகணத்தை பார்க்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை சென்னையில் மேகமூட்டம் காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க முடியவில்லை. இதனால் சென்னை மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வைத்தான் சூரிய கிரகணம் இன்று கூறப்படும். இந்த சூரிய கிரகணம் சென்னையில் பகுதியில் இன்று காலை 6.22 மணி முதல் 26 நிமிடங்களுக்கு நிகழும் என ஏற்கனவே வானிலை நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக சென்னை பெசன்ட்நகர் எலியாட்ஸ் கடற்கரையில் இந்த சூரிய கிரகணத்தை காண பிர்லா கோளரங்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால் சென்னையில் இன்று காலை முதல் வானத்தில் மேகமூட்டம் அதிகம் இருந்ததால் இந்த சூரிய கிரகணத்தை பார்வையாளர்களால் முழுமையாக கண்டு ரசிக்க முடியவில்லை.
ஆனால் இந்த முழு சூரிய கிரகணத்தை ஆசிய நாடுகள், பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளிள் மற்றும் இந்தோனேசியா உள்பட ஒருசில நாடுகளில் முழுமையாக தெரிந்ததாகவும், அந்த பகுதிகள் சூரிய கிரகணத்தை பார்த்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.