முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி
முழுக்க முழுக்க சூரிய ஒளியின் சக்தியினால் மட்டுமே இயங்கும் விமானம் ஒன்று வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த விமானத்தை இயக்க ஒருதுளி பெட்ரோல் கூட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோலார் இம்பல்ஸ் விமானம் என்று கூறப்படும் இந்த விமானம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பி உலகம் முழுவதும் பறக்கும் லட்சியத்துடன் சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கி புறப்பட்டது.
சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்திற்கான இப்பயணத்தில் 62 வயதான விமானி உலகின் முதல் சூரிய சக்தி விமானமான சோலார் இம்பல்ஸ், தனது மிக முக்கியமான பயணமான சீனாவில் இருந்து மத்திய பசிபிக் நோக்கி தொடர்ந்து 6 இரவு மற்றும் 6 பகல் நிற்காமல் பறக்கும் கனவு பயணத்தை தொடங்கியது.
ஏறத்தாழ 5 மாதங்கள் ஒரு துளி பெட்ரோலின் உதவியில்லாமல் முழுக்க முழுக்க சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம், சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்கும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கி புறப்பட்டது. பல நாடுகளை கடந்து, சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்திற்கான இப்பயணத்தில் 62 வயதான விமானி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் மற்றும் துணை விமானியான பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இவ்விமானத்தை ஓட்டிச்சென்றார். இதன் பின்னர், அமெரிக்காவின் பல மாநிலங்களின் வழியாக வலம்வந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தை நேற்று ஒக்லஹாமா மாநிலத்தில் இருந்து ஓஹியோ மாநிலத்துக்கு ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஓட்டிச் சென்றார். சுமார் 16 மணிநேர பயணத்துக்கு பின்னர் உள்ளூர் நேரப்படி இன்றிரவு 9.56 மணியளவில் ஓஹியோவில் உள்ள டேட்டன் விமான நிலையத்தில் அவர் பத்திரமாக தரையிறக்கினார். திட்டமிடப்பட்ட பயண நேரத்தைவிட ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே ஓஹியோவுக்கு இந்த விமான வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.