சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானம் தயாரிக்கும் பொறியாளர்கள் சோலார் சக்தியில் இயங்கும் விமானங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வருடம் முதல் முழுக்க முழுக்க சோலார் சக்தியில் இயங்கும் விமானம் பறக்கத்தொடங்கும் என பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு முன்பே Bertrand Piccard மற்றும் Andre Borschberg ஆகிய இரண்டு பைலட்டுக்கள் சோலார் சக்தியில் இயங்கும் சிறியவகை விமானத்தை கண்டுபிடித்தனர். தற்போது புதிய தொழில்நுட்பத்தில் பயணிகள் விமானத்தையே சோலார் சக்தியில் இயங்க வைக்க பொறியாளர்கள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் விமானங்களுக்கு எரிபொருளே தேவைப்படாத நிலை வந்துவிடும்.
விமானத்தின் மேல்பகுதியில் 72 மீட்டர் நீளத்திற்கு ஒரு சிறப்பு இறக்கையின் மேல் சூரியத்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து சக்தி பெறப்பட்டு அந்த சூரிய சக்தி விமானத்தை இயக்க பயன்படுத்தப்படுகிறது. அடுத்த வருடம் 20 சோலார் சக்தி விமானங்கள் பறக்க தொடங்கிவிடும் என்று இந்த பொறியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.