மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு தரும் எளிய மருத்துவம்

1a809852-660f-4ade-ab3f-b0560ef542e5_S_secvpf

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விஷயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு. இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவ வேண்டும். இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கவும். அதை தட்டு போட்டு மூடி விடவும். ஆவி பிடிக்கும் போது அதில் நீலகிரி தைலம் 2 சொட்டு ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதனை 2 நாட்கள்  தொடர்ந்து செய்து வந்தால் மூக்கடைப்பு, சளி தொல்லை நல்ல தீர்வு காணலாம். 

 

Leave a Reply