இயற்கை நமக்கு அளித்துள்ள வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு(alail Propyl-di-sulphide) என்ற எண்ணெய் தான்.
இந்த எண்ணெய், வெங்காயத்தை உரிக்கும்போது, திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.
மருத்துவ பயன்கள்
வெங்காயத்தில் கால்சியம்(Calcium), மக்னீசியம்(Magnisium), சோடியம்(Sodium), பொட்டாசியம்(Potasium), செலினியம்(Selenium), பாஸ்பரஸ்(Phosphorus) போன்ற சத்துக்கள் உள்ளன.
பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண்டப்படுகிறது.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றைப் பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல்வலி, ஈறுவலி குறையும்.
அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.
ரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து(Red Blood Cells), ரத்த அழுத்தத்தை(Blood Pressure) போக்குகிறது, குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்கள், வெங்காயச்சாறு மற்றும் தேன் கலவையை சம அளவில் எடுத்துக்கொண்டால் தொண்டை புண், இருமல் குணமடையும்.
புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு, எனவே வெங்காயத்தை அதிகமாக சாப்பிடுங்கள்.
வெங்காயத்தில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும், ஆன்டிபாக்டீரியம் இருப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கும்.
வெங்காய சாம்பார்
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும்.
வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், மிளகு சோம்பு பொடி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியவுடன், தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் அதில், புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்புச்சேர்த்து, மூடி வைத்து, மிதமான சூட்டில்கொதிக்க விடவும்.
சுவையா வெங்காய சாம்பார் ரெடி.
பயன்கள்
நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
குறைவான கொழுப்புச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்கு உதவும்.
செரிமானத்திற்கு உதவுகிறது.
சிறு வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
அழகு தரும் வெங்காயம்
வெங்காயச் சாற்றுடன் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து, முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாக காணப்படும்.
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது.
அதிலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை குறையும்.