சோமவாரம் !!!

396561855_f34452b707

சங்கு செல்வத்தின் அடையாளம். கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் (சோம வாரம்) சிவ வழிபாடு செய்பவர்களுக்கு முக்கியமானது.  நவக்கிரகங்களில் சந்திரன் “மனோகாரகன் ஆவார். இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார்.  குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே. இந்த சந்திரனை, சிவபெருமான் தலையில் சூடியுள்ளார்.  சந்திரனுக்கு “சோமன் என்ற பெயரும் உண்டு. இதனால் சிவனுக்கு “சோமசுந்தரர் “சோமசேகரன் “பிறை நுதலான் என்ற பெயர்களும்  உண்டு. எனவே, மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது. அதிலும் ஒளி  மாதமான, கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தால், குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிரச்னைகளை கணவனும், மனைவியும்  இணைந்து சமாளிக்கும் மனதிடம் உண்டாகும். டிச.2, 9ல் சிவாலயங்களில் சங்காபிஷேகம்  தரிசிக்கலாம்.


சங்கு நந்தி:
கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தாணு (சிவன்), மால் (பெருமாள்), அயன் (பிரம்மா)  ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த மும்மூர்த்திகளை தரிசிக்கலாம். இக்கோயிலில் உள்ள நந்தி கடலில் கிடைத்த சங்குகளைக்  கொண்டு செய்யப்பட்டதாகும். அமைப்பிலும் பெரிதாக இருப்பதால் இதற்கு “மாகாளை என்று பெயருண்டு.

7914038322_97f034c54b_z
திருப்பாவையில் சங்கு: பழம்பெரும் கோயில்களில் காலை வேளையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் இருந்துள்ளது. சங்கு ஒலிக்கும்  இடத்திற்கு தேவர்கள் வருவதாக ஐதீகம். திருப்பாவையில் ஆண்டாள் காலையில் விடிந்து விட்டது, சங்கும் ஒலித்து விட்டது, இன்னும்  எழுந்திருக்கவில்லையா தோழியே! என்று கேட்கிறாள். புள்ளும் சிலம்பினகாள் எனத்துவங்கும் பாடலில், “வெள்ளை விளிசங்கின்  பேரரவம் கேட்டிலையோ? என்று பாடுகிறாள். இதிலிருந்து அக்காலத்தில் அதிகாலையில் கோயில்களில் சங்கொலி கேட்டு, எழும்  பழக்கம் இருந்துள்ளதை அறியலாம். “கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோமருப்பொசித்த  மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கேஎன்று மற்றொரு பாடலில் ஆண்டாள்  சொல்கிறாள். “ஆழி என்றால் பாற்கடல். கடலில் பிறந்ததால் “ஆழி வெண் சங்கு எனக் குறிப்பிடுகிறாள்.

சங்காபிஷேகத்தின் பலன்: சங்கபிஷேகத்தால் சகோதர  ஒற்றுமையும் வளரும். சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ  அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். இதைத் தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடுகளில் நுழைவு வாயில்  தரையில் சங்கு பதிக்கும் வழக்கம் இருக்கிறது. சில வீடுகளின் வாசல் முன்பும் சங்கைக் கட்டுவதுண்டு. இதனால் திருஷ்டி தோஷம்  நீங்கி செல்வம் விருத்தியாகும்.

சங்காபிஷேகம் காண்போம் செல்வச்செழிப்பு அடைவோம்!

Leave a Reply