மலேசிய விமானத்தில் பலியானவர்களின் உடல்கள் கடத்தல். கிளர்ச்சியாளர்கள் அட்டுழியம்

13கடந்த வியாழக்கிழமை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களா ஏவுகணை ஒன்றின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் MH 17 என்றவிமானத்தில் பலியான 295 பேர்களின் உடல்களில் பல உடல்களை காணவில்லை என்றும், அந்த உடல்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மர்ம இடத்திற்கு கடத்திக்கொண்டு சென்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

உக்ரைன் அரசின் அவசர சேவை பிரிவின் செய்தி தொடர்பாளர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விபத்து நடந்த பகுதியில் ஒன்பது மைல்கள் தூரத்திற்கு விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடல்களும் சிதறிக்கிடந்தது என்றும் அதில் 196 பேர்களின் உடல்களை அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் கடத்தி எடுத்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.
 

விபத்து நடந்த சில நிமிடங்களில் லாரி ஒன்றில் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த கிளர்ச்சியாளர்கள் அனைத்து உடல்களையும் எடுத்து கொண்டு சென்றுவிட்டதாகவும், உக்ரைன் அரசின் மீட்புப்பணியினர் விபத்து நடந்த இடத்திற்கு சென்றபோது அங்கு  ஒரு உடல் கூட கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விபத்தில் இறந்த பயணிகளின் உடல்களை கிளர்ச்சியாளர்கள் எங்கு கொண்டு சென்று உள்ளனர் என்பது குறித்து அரசுக்கு திட்டவட்டமாக தெரியவில்லை என்று உக்ரைன் நாட்டு செய்தி தொடர்பாளர் நடாலியா பைஸ்ட்ரோ கூறியுள்ளார்.

Leave a Reply