அரசியலை விட்டு விலகுகிறாரா தீபா? கணவர் அதிரடியால் அதிர்ச்சி

அரசியலை விட்டு விலகுகிறாரா தீபா? கணவர் அதிரடியால் அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். பேரவை தொடங்கிய நாளில் இருந்தே அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே நிர்வாகிகளை நியமனம் செய்வதில் கருத்துவேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் தீபாவின் பேரவையில் இருந்து திடீரென புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னால் சசிகலா கும்பல் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று தீபா செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘”எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். எனது கணவர் புதுக்கட்சி ஆரம்பிப்பது அதிர்ச்சியாக உள்ளது. என் கணவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.வதந்திகளுக்கு பின்னால் சசிகலாவின் குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

என்னுடைய சொந்த குடும்பத்தையே எனக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். பேரவையில் அதிமுகவின் தொண்டர்கள் இணைந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிலர் உள்ளனர். அரசியலை வீட்டு நான் விலக வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக எனக்கு தொல்லைகளை தருகின்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்காது. நான் அரசியலைவிட்டு விலக மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply