கண்பார்வையை அதிகரிக்கும் சில காய்கறி, பழவகைகள்!

annasi

கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும். சப்போட்டா பழத்தின் தோள், நெல்லிக்காய் இரண்டையும் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும்.

சப்போட்டா பழத்தின் தோள் சாப்பிட்டால் கண் குளிர்ச்சி பெறும். சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

முருங்க இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசி காலையில் எழுந்தவுடன் கழுவி வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.

ஒரு வாழைப் பழம், ஒரு பப்பாளி பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து அவித்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகி கண் வலி, கண் நோய்கள் குணமாகும்.

Leave a Reply