செல்போன் கதிர்வீச்சி பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில வழிகள்!

cell-phones1

தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் காலம் இது. எண்ணற்ற அறிவியல் வளர்ச்சியின் நடுவில் நம்மை மறந்து வாழ்ந்து வருகின்றோம். மெஷினை வைத்து எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இப்பொழுது மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஒரு மணிநேரத்தில் முடிக்க வேண்டிய செயலை அரை நொடியில் முடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த வளர்ச்சியில் பெரும் அளவு பங்கு வகிக்கும் பொருள் செல்போன். தற்போது செல்போன் இல்லாத வீடே இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் மொபைல் வைத்திருக்கின்றனர். இதனால் மக்களின் தகவல் தொடர்பு மிகுந்த அளவில் வளர்ந்து உள்ளது. வளர்ச்சி இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் அல்லவா. எதையும் குறைவாக பயன்படுத்தினால் நன்மை நமக்கு தான்.

பல மொபைலை அதிக அளவில் பயன்படுத்துவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றது என்று ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளது. இதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூளையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளனர். இதனால் மூளை அட்டாக் வருகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆறு வருடங்களுக்கு மேல் மொபைலை அதிக அளவில் பயன்படுத்தும் மக்களுக்கு பல நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்போன் நம்மை பாதிக்காமல் எப்படி பயன்படுத்துவது என்று இங்கு காண்போம்.

ஹெட் செட் அல்லது ஸ்பீக்கர் பயன்படுத்தவும்
அலைபேசியை விட ஹெட் செட் குறைந்த அளவிலான கதிர்வீச்சை கொண்டது. வயர் அல்லது வயர் அல்லாத செல்ஃபோன் என்று எதுவாக இருந்தாலும் ஹெட்செட் மிகவும் பாதுகாப்பானது. சில வயர் அல்லாத செல்போன் குறைந்த அளவிலான கதிர்வீச்சை கொண்டுள்ளது. நீங்கள் பேசாத மற்ற நேரத்தில் வயரை எடுத்து விடவும். ஸ்பீக்கர் பயன்படுத்தி பேசுவதாலும் கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.

அதிகமாக கேளுங்கள் குறைவாக பேசுங்கள்
நீங்கள் அதிகமாக பேசும் பொழுதும், மெசேஜ் அனுப்பும் பொழுதும் கதிர்வீச்சு அதிகம் வருகின்றது. ஆனால் கேட்கும் பொழுது வருவதில்லை. எனவே குறைவாக பேசி அதிகமாக கேளுங்கள். இதனால் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க முடியும்.

வார்த்தை பரிமாற்றம்
செல்போனில் பேசுவதை விட வார்த்தை பரிமாற்றம் செய்யும் பொழுது குறைந்த அளவில் கதிவீச்சு பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே அதிகம் வார்த்தை பரிமாற்றம் செய்து குறைவாக பேசி மகிழுங்கள்.

போனை எட்டி வைத்து பேசவும்
பேசும் பொழுது எப்பொழுதும் செல்போனை எட்டி வைத்தே பேசவும். அதனுடன் ஹெட் செட் போட்டு தானே பேசுகின்றோம் என்று பாக்கெட்டில் அல்லது பேண்ட் பாக்கெட்டில் வைத்து பேச வேண்டாம். அதன் மூலமாகவும் கதிர்வீச்சு பரவக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

குறைந்த கதிர்வீச்சு பரவும் செல்ஃபோனை பயன்படுத்தவும்
எல்லா செல்போன்களும் ஒன்றானது அல்ல. ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டு இருக்கும். செல்போன் வாங்கும் போது குறைந்த கதிர்வீச்சு உள்ள செல்போனாக பார்த்து வாங்கவும்.

சிக்னல் இல்லையா? போனை எடுக்க வேண்டாம்
சிக்னல் இல்லையா? அவசரமே வேண்டாம். டவர் இருக்கின்றதா என்று பார்த்து பின்னர் போன் செய்யவும். இதனால் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்கலாம்.

கதிர்வீச்சுக் கவசம் தேவை
கதிர்வீச்சுகென்று கவசங்கள் உள்ளன. ஆண்டெனா தொப்பி அல்லது கீபோர்ட் கவர்கள் போன்றவைகளைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இதனால் குழந்தைகள் மொபைலை பயன்படுத்தும் போதும் எந்த பாதிப்பும் வராமால் பாதுகாக்க முடியும்.

குழந்தைகளிடம் இருந்து மொபலை தூர வையுங்கள்
மொபைலை அதிக அளவில் பயன்படுத்துவதால் பெரியவர்களுக்கு பல தொல்லை வரும் நிலையில் பிள்ளைகளை நினைத்து பாருங்கள். குழந்தைகள் அதிக அளவில் மொபைலை பயன்படுத்தினால், அதிலிருந்து வரும் கதிர்வீச்சு அவர்கள் மூளை நரம்பை பாதிக்கும் எனவே கவனமாக இருங்கள்.

சுறுக்கமாக பேசுங்கள்
அதிக நேரம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். பேச்சு முக்கியம் என்று நினைத்தால் கதிர்வீச்சு உங்களை பாதிக்கக் கூடும். ஸ்கைப் பயன்படுத்தி வேண்டுமானால் அதிக நேரம் பேசலாம். குறைவாக பேசினால் சண்டையும் இல்லை கதிர்வீச்சின் பாதிப்பும் இல்லை.

சரியான இடத்தில் மொபைலைப் பயன்படுத்தவும்
பேச வேண்டும் என்று நினைத்தவுடனேயே இடம் பார்க்காமல் மொபைலை பயன்படுத்த வேண்டாம். எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்பதை நன்கு ஆராய வேண்டும். சுற்றி மூடப்பட்ட இடம், அதிக வாகனம் புழங்கும் இடம், மெட்டாலிக் டவர் உள்ள இடம், சுரங்கம் போன்ற இடங்களில் பேச வேண்டாம்.

சட்டை பாக்கெட்டில் மொபைலை வைக்க வேண்டாம்
உங்கள் சட்டை பாக்கெட்டில் மொபைலை வைக்க வேண்டாம். இதனால் உங்கள் விந்தணுவின் அளவை நீங்கள் குறைக்கக்கூடும். சமீபத்திய ஆராய்ச்சியில் மொபைலை அதிகம் பயன்படுத்துவதால் ஹார்மோன் பாதிப்பு ஏற்படுகின்றது என்று கண்டுபிடித்து உள்ளனர். இதனால் குழந்தையின்மை போன்ற பல நோய்கள் வருவதால் ஜாக்கிரதையாக இருங்கள்.

நடுராத்திரியில் ஃபேஸ்புக் வேண்டாம்
சிலர் மொபைலை இரவு நேரத்தில் அதுவும் பாதி இரவு தூக்கத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுவதுடன் தூக்கமும் கெடுகின்றது. 11 சதவிகித மக்கள் மொபைலை இரவு நேரத்தில் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக இளைஞர்கள் இதனால் பெரும் அளவில் பாதிப்பு அடைகின்றனர். அலாரம் வைப்பதால் கூட பாதிப்பு வருகின்றது.

எல்லா நேரமும் புளுடூத் வேண்டாம்
புளுடூத்தில் கதிர் வீச்சு குறைவாக இருக்கின்றது தான். அதற்காக அதில் இல்லை என்று சொல்ல முடியாது. அதிலும் கதிர்வீச்சின் பாதிப்பு உள்ளது. அதிலும் அதை அதிக அளவில் பயன்படுத்துவது மேலும் சிக்கலுக்கு வழி செய்கின்றது. எனவே எதையும் அளவுடன் பயன்படுத்தினால் ஆனந்தமாக வாழ முடியும்.

Leave a Reply