குடல் புற்று நோய்யை தடுக்க சில வழிகள்…!

குடல் புற்று நோய்யை தடுக்க சில வழிகள்…!

 

CDR433287-274

பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் அதிகமாகதாக்கி வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது. இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை. எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்

Leave a Reply