ராகுல்காந்தி ஒரு டாக்சி டிரைவரா? இணையத்தில் வெளியான சான்றிதழால் பரபரப்பு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காஸியாபாத் அருகே இந்திராபுரம் என்ற பகுதியில், வாடகை வீட்டில் வசிப்பவர்களின் முழு விபரங்களை அதற்கான சான்றிதழை காவல்துறையினர் அளித்து வருகின்றனர்..
இந்நிலையில் ஒரு சான்றிதழில் வாடகைதாரரின் பெயர் ராகுல்காந்தி என்றும் அவருடைய தந்தை பெயர் ராஜிவ்காந்தி என்றும் நிரந்தர முகவரியாக எண்-12, துக்ளக் சாலை, புதுடெல்லி என்றும் தொழில் டாக்சி டிரைவர் என்றும், திருமணமாகாதவர் என்றும் விவரங்கள் குறிப்பிட்டு அந்த ஆவணத்தை போலீஸாரர் சரிபார்த்ததாக கையெழுத்திட்டு, ‘சீல்’ வைத்துள்ளனர்.
ராகுல்காந்தியின் புகைப்படத்தின் மீது, காவல் நிலைய முத்திரை குத்தப்பட்ட இந்த சான்றிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஆணவம் போலியானது, இந்த ஆவணம் பழைய வடிவமைப்பில் உள்ளதாகவும் யாரோ விஷமிகள் இதை தயார் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திராபுரம் காவல் ஆய்வாளர் கோரக்நாத் யாதவ் கூறியுள்ளார்.