அஜீத் படத்தை முடக்க சதியா? திடுக்கிடும் தகவல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இன்று முதல் எந்த தமிழ்ப்படங்களையும் ரிலீஸ்செய்ய மாடோம் என திடீரென அறிவிப்பு வெளியிட்டு 24 மணி நேரத்தில் திடீரென அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டனர். இதற்கு காரணம் விஷாலின் எதிர்ப்பே என்று கூறப்படுகிறது. நடிகர் சங்கத்தின் எதிர்கால தலைவர் என்று எதிர்பார்க்கப்படும் விஷாலை பகைத்து கொள்ள விரும்பாத தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக பணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த தடை அறிவிப்பை சில காலம் தள்ளி போட விரும்பினார்கள். ஆனால் அக்டோபரில் விஜய்யின் ‘புலி’ படம் வெளிவரவுள்ளதால் அவருக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரையரங்குகளுக்கு எதிராக ஒன்றிணைந்து அக்டோபர் 23ம் தேதியிலிருந்து சில நாட்களுக்கு படங்கள் ரிலீஸ் கிடையாது என முடிவெடுத்துள்ளனர்
தீபாவளிக்கு முன்னரே கமல் தன்னுடைய ‘தூங்காவனம்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டதால் அவர் தப்பித்துவிடுவார். ஆனால் அஜீத்தின் ‘தல 56’ படம் தீபாவளிக்குத்தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கனவே விற்பனையாகிவிட்ட நிலையில் வேண்டுமென்றே அஜீத் படத்தை முடக்க வேண்டும் என்பதற்காக இந்த தடை அறிவிப்பு திட்டமிட்டு அறிவித்துள்ளதாக ஒருசிலர் சந்தேகப்படுகின்றனர். ஆனால் வழக்கம்போல் அஜீத் இதுகுறித்த எந்த கவலையும் இல்லாமல் தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.