விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானம் இருக்குமிடம் தெரிந்தது. மீட்புக்குழுவினர் கண்டுபிடிப்பு.

flightகடந்த ஞாயிறு அன்று இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் 8501, எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து அதில் பயணம் செய்த 162 பேர்களும் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் 40 பேர்களின் உடல்கள் மீட்டெட்டுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து தற்போது விமானம் கடலில் இருக்கும் இடத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடலுக்கடியில் விமானம் மேலும் கீழும் அசைந்து வருவதாகவும், விமானத்தை வெளியே எடுக்க முடியுமா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் மீட்புக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இதுவரை நாற்பது உடல்கள் கண்டெடுக்கப்பட்டாலும், உப்புநீரில் உடல்கள் ஊறியுள்ளதாலும், மீன்கள் சேதப்படுத்தியதாலும் உடல்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விமான நிறுவனத்தின் யூனிபார்மில் இருந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற உடல்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மரணம் அடைந்த அனைவருக்கும் ஏர் ஏசியா நிறுவனத்தின் சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்படும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்  கூறியுள்ளார்.

Leave a Reply