அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்ததா காங்கிரஸ்? சோனியா காந்தி அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கிய அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் பிரதிநிதியாக வீரப்பமொய்லி அவர்களை நியமனம் செய்வதாகவும் சோனியா காந்தி அறிவித்துள்ளார்

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்த அமைப்பிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் தாம் காங்கிரஸ் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.