சோனியா-மம்தா திடீர் சந்திப்பு: ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேற்று மாலை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இருவரும் வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக உள்ளன. பாஜகவுக்கு எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி ஆதரித்தாலே அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வகையில் காங்கிரஸ் ஒரு அதிரடி வேட்பாளரை நிறுத்தினால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனை செய்யவே சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.