சோனியா காந்திக்கு ‘பாரத ரத்னா’ விருதா? காங்கிரஸ் விளக்கம்

soniaமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு நேற்று நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத நேற்று வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டிற்கே சென்று இந்த விருதை அளித்து அவரை கெளரவப்படுத்தினார். பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய்க்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சோனியாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்., தொண்டர்கள் கோரிக்கை தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து கட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரிட்டா ஜோஷி நேற்று விடுத்த அறிக்கையில் கூறும்போது, “சோனியா காந்தி உலக அளவில் மிக சிறந்த தலைவர். அவர் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார். மேலும் அவர் உலகில் அதிக பலம் வாய்ந்த பெண்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பெற்றவர்.தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் யாருடனும் ஒப்பிட முடியாத தலைவராக இருக்கும் அவருக்கு பாரத ரத்னா விருது பெரும் லட்சியம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

வாஜ்பாயின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சோனியா செல்லாதது ஏன் என கேட்டதற்கு, அந்த விழா தொடர்பாக சோனியாவுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் ரிட்டா ஜோஷி தெரிவித்துள்ளார்.

Leave a Reply