குழந்தைகளுக்கு ஜேம்ஸ்பாண்ட், ஹாரிபாட்டர் போன்ற பெயர் வைக்க தடை.

மெக்சிகோ நாட்டில் உள்ள சோனோரா என்ர மாநிலத்தில் குழந்தைகளுக்கு சிலவகை பெயர்களை வைக்க அந்த மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் டுவிட்டர், யாஹூ என்ற பெயர்களும் அடங்கும்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது குழந்தைகள் கேலி செய்யப்படாமல் இருக்கவே இந்த பெயர்கள் தடை செய்யப்பட்டிருப்பதாக சோனோரா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. டுவிட்டர், யாஹூ, ஹாரிபாட்டர், ஜேமஸ்பாண்ட், ராம்போ ஆகிய பெயர்களும், மேலும், வர்ஜின், ஹிட்லர், ஈமெயில், பர்கர் கிங், கிறிஸ்துமஸ் டே, ரோபோகாப், ரோலிங் ஸ்டோன் ஆகிய பெயர்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இதுவரை 61 பெயர்களை தடை செய்துள்ள சோனோரா மாநிலம், மேலும் சில பெயர்களை கண்டறிந்தால், இந்த பட்டியல் இன்னும் நீளக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply