‘தல 56’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது சோனி மியூசிக்

thala 56அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சோனி நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. முதல்முதலாக அஜீத் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதை அறிய அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் நடித்த மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் இசை உரிமையையும் இதே சோனி நிறுவனம்தான்  வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Leave a Reply