சோனி எக்ஸ்பீரியா இசட்5

images (6)

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா இசட் 5 கருவியை இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. இந்த கருவியானது 23 எம்பி ப்ரைமரி கேமரா 1/2.3 எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் மற்றும் f/2.0 G லென்ஸ் கொண்டிருக்கின்றது. இந்த கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஐபிஎஸ் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே 1080*1920 ரெசல்யூஷன் மற்றும் கீரல் ஏற்படாத கிளாஸ் மற்றும் ஓலியோஃபோபிக் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு குவால்காம் MSM8994 ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், ஆக்டா கோர் சிபியு, 3ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்திற்கு அப்கிரேடு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சோனி எக்ஸ்பீரியா இசட்5 கருவியானது 2900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

சோனி எக்ஸ்பீரியா இசட்5 கேமரா சிறப்பம்சங்கள் 23 எம்பி எக்ஸ்மார் ஆர்எஸ் மொபைல் சென்சார் மற்றும் அதிநவீன மென்பொருள் பொருட்களின் அருகாமையில் கொண்டு செல்வதோடு, எவ்வித பொருள் அல்லது இடங்களையும் அதிக துல்லியத்துடன் படமாக்கும் திறன் கொண்டிருக்கின்றது. சோனியின் மாற்றக்கூடிய லென்ஸ் கேமரா மற்றும் ஆல்பா தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட்போனில் வேகமான ஆட்டோஃபோகஸ் வசதியை ஒத்துழைக்கின்றது. தற்சமயம் வெளியாகியிருக்கும் ஸ்மார்ட்போன்களை விட அதிவேக ஆட்டோஃபோகஸ் மற்றும் மனித கண் சிமிட்டல்களை விட 10 மடங்கு வேகமாக செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply