Xperia ZL எனும் ஸ்மார்ட் கைப்பேசி.

xperia-zl_0011

கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Sony ஆனது Xperia ZL எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது. இந்நிலையில் அக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல quad-core Qualcomm Snapdragon S4 Pro processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும், 13 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளன.

இதேவேளை இக்கைப்பேசிகளில் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளமும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply