செளந்தர்யா ரஜினிகாந்த் சென்ற கார் விபத்து. தனுஷ் அதிரடி நடவடிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் மணி காயம் அடைந்தார்.
இந்த விபத்தால் செளந்தர்யா பதட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் வந்த நடிகர் தனுஷ், டிரைவர் மணியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விபத்தால் மணிக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பை தான் ஏற்று கொள்வதாகவும், மேலும் ஆட்டோ பழுதானத்திற்குரிய முழு செலவையும் தான் தருவதாகவும் கூறியதால், மணி சமாதானம் அடைந்து புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என தெரிகிறது.
தனுஷின் இந்த அதிரடி நடவடிக்கையால் செளந்தர்யா போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.