உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றி

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றி

CRICKET-WT20-2016-WIS-SRIஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றி பெற்றன.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் மோரிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.2 ஓவர்களில் மூன்றே விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபிளட்சர் 84 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Leave a Reply