3 லட்சம் அப்பாவிகள் படுகொலைக்கு காரணமான சூடான் அதிபரை கைது செய்ய உத்தரவு.

sudanஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் அதிபரை கைது செய்ய சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் தென்னாப்பிரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை இருப்பதால் சூடானில் பெரும் பதட்டம் நிலவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் சூடானின் அதிபராக இருந்து வருபவர் 71 வயது உமர் அல் பஷீர். ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் பதவிக்கு வராமல் புரட்சி செய்து அதிகாரத்தை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்ஹக்கது. இவருடைய அரசுக்கு எதிராக சூடான் விடுதலை முன்னணி, நீதி மற்றும் சமத்துவத்துக்கான முன்னணி ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் 2003 ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை உமல் அல் பஷீர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில்  இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மனித உரிமை குற்றங்கள் செய்ததாகவும் அதிபர் உமல் அல் பஷீர் மீது நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில், உமர் அல் பஷீரை கைது செய்யும்படி, தென் ஆப்பிரிக்காவுக்கு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Reply