17 வருடங்களுக்கு முன்னர் தொலைந்த போன குழந்தை குடும்பத்துடன் சேர்ந்த அதிசயம்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்து மூன்றே நாட்கள் ஆன பச்சிளங்குழந்தை ஒன்று கடத்தப்பட்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர் அதிர்ஷ்டவசமாக தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள ஊட்ஸ்டோக் என்ற பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு செலெஸ்டே என்ற பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் மருத்துவமனையில் இருந்து அந்த குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இத்தனை வருடங்களாக குழந்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தையை பறிகொடுத்த செலேஸ்டேவுக்கு அதன் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்தன.
சமீபத்தில் செலேஸ்டேவின் இரண்டாவது பெண் குழந்தை தான் படிக்கும் பள்ளியில் தன்னை போலவே ஒரு மாணவி படித்துக்கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார். அவருடன் நட்புடன் பழகி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தபோது, அவருடைய பெற்றோரும் ஆச்சரியமடைந்து அந்த மாணவியின் விவரங்களை விசாரித்தனர். பின்னர் மரபணு சோதனை செய்யப்பட்டபோது 17 வருடங்களுக்கு முன்னர் தாங்கள் தொலைத்த குழந்தைதான் இந்த மாணவி என்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.
17 வருடங்களுக்கு முன் குழந்தையை கடத்திய அந்த மாணவியின் வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டார்.