தென்னாப்பிரிக்காவில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான தாமிரக்கம்பிகளை திருடிய ஒரு இளைஞன் உடல் மூழுவதும் தீப்பற்றி எரிந்து துடிதுடித்த நிலையில் அந்த இளைஞனுக்கு உதவ யாரும் முன்வராததால் பரிதாபமாக பலியானார்.
தென்னாப்பிரிக்காவின் விட்டிபேங்க் என்ற நகரில் மின்சார வாரியத்தினர் மின்சார பணிகளுக்காக தாமிரகம்பிகளை வாங்கி வைத்திருந்தனர். அந்த தாமிரக்கம்பிகளை ஒரு திருடன் திருட முயற்சி செய்தபோது எதிர்பாராத வகையில் அந்த இளைஞனை மின்சாரம் தாக்கியதால் உடல் முழுவதும் தீப்பற்றியது. உடலில் எரியும் தீயுடன் அலறிய அந்த இளைஞன் அந்த பகுதி வழியாக வந்த வாகனங்களிடம் தன்னை மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு கதறினார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1MSXCTg” standard=”http://www.youtube.com/v/DZct5pmVQH8?fs=1″ vars=”ytid=DZct5pmVQH8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8700″ /]
ஆனால் திருடனுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் அந்த இளைஞன் நடந்தே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் மறுநாள் சிகிச்சையின் பலனின்றி அந்த இளைஞர் மரணமடைந்தார்.
இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.