மழையால் 4 வது ஆட்டம் ரத்து. வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி டிரா ஆகுமா?

மழையால் ஆட்டம் ரத்து. டிராவில் முடிந்தது வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி

cricket 100தென் ஆப்பிரிக்கா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 4வது நாள் ஆட்டம் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
 
தென் ஆப்பிரிக்கா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 248 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 326 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 21.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் நேற்றைய ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. எல்கார் 28 ரன்களுடனும், வான் சைல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்க வேண்டும். ஆனால், இன்றும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு மழை விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் 1.35 மணியளவில் நடுவர்கள் இன்றைய ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதனால், ஒரு பந்துகூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை ஒருநாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு டிராவை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 30ஆம் தேதி டாக்காவில் தொடங்குகிறது.

Leave a Reply