உலகக்கோப்பை கால்பந்து போட்டி: முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா நிதானமான ஆட்டம்.

CRICKET-WC-2015-NZL-RSAஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தற்போது விளையாடி வருகிறது.

சற்று முன்வரை தென்னாப்பிரிக்க அணி 38 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணியின் டீபிளஸ்ஸிஸ் மிக அபாரமாக விளையாடி 82 ரன்கள் எடுத்து தொடரந்து பேட்டிங் செய்து வருகிறாஅர். டிவில்லியர்ஸ் 60 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கின்றார்.

ஆம்லா 10 ரன்களும், க்யூ டி காக் 14 ரன்களும், ரோஸ்ஸவ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply