நெல்சன் மண்டேலாவுடன் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியர் மரணம்
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா சுமார் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். இவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அகமது கத்ராடா என்பவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அகமது கத்ராடா உயிரிழந்தார். அவருக்கு வயது 87
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 26 ஆண்டுகள் 3 மாதங்கள் நெல்சன் மண்டேலாவுடன் சிறை வாசம் அனுபவித்தவர் அகமது கத்ராடா விடுதலைக்குப் பின் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். நெல்சன் மண்டேலாவை இவர் தனது மூத்த சகோதரர் என அழைத்து வந்தார்.
விடுதலைக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயக அதிபராக 1994ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா தேர்வு செய்யப்பட்டபோது, அந்நாட்டின் கொள்கைளை வகுத்ததில் அகமது கத்ராடாவுக்கும் முக்கிய பங்கு இருந்தது. இவருக்கு இந்திய அரசு வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருது கடந்த 2005-ல் வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமது கத்ராடா மறைவிற்கு இந்திய, தென்னாபிரிக்க தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.