தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை வாக்களிக்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற பெயருக்கு பதிலாக ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என்ற பெயரை வைக்க வேண்டும்’ என்று கூறினார்.
ஆனால் அதன்பின்னர் வாக்களிக்க வந்த கமல்ஹாசன் கூறுகையில், ”தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இந்திய நடிகர் சங்கம்’ என்று மாற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் இருக்கின்ற பிரிவுகள் போதும், இனிமேலும் ஒரு பிரிவு வேண்டாம் என்றும் தேர்தல் முடிந்த பின்னர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது’ என்றும் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் இருவேறு கருத்துக்களை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.