இறால் மீன் கறி

தேவையான பொருட்கள்:
இறால் மீன் – 250 கிராம்
மிளகாய் வற்றல் – 6
மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
சீரகம் – 3 தேக்கரண்டி
தேங்காய் – 3 சில்
சின்ன வெங்காயம் – 25
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
இறால் மீனைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 5 கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்தவுடன், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலினையும் போட்டு நன்கு கிளறி வேக விட வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறால் மீன் நன்கு வெந்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

Leave a Reply