அதிபர் பதவிநீக்கம் எதிரொலி! தென்கொரியாவில் மே 9ஆம் தேதி தேர்தல்
உடன்பிறவா தோழியால் பதவியிழந்த தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை அவர்களுக்கு பதிலாக புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் மே மாதம் 9ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்கொரிய அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை மற்றும் அவரது தோழி சோய் சூன்-சில் ஆகியோர் சட்டவிரோதமக பல ஊழல்கள் செய்ததால் அந்நாட்டு நீதிமன்றம் அதிபரை பதவிநீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து பதவியிழந்த அதிபருக்கு பதிலாக புதிய அதிபரை தேர்வு செய்ய உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன
இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு பார்க் கியூன்-ஹை-க்குப் பதிலாக, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய சட்டத்தின்படி, அதிபர் பதவி விலகிய 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.