100 பள்ளி மாணவர்கள் சிக்கிய தென்கொரிய கப்பல் விபத்து. பள்ளி பிரின்சிபால் தூக்கில் தொங்கி தற்கொலை.

9

கடந்த புதன்கிழமை தென்கொரிய கப்பல் Ferry கடலில் கவிழ்ந்து மூழ்கியதால் அதில் பயணம் செய்த 470 பயணிகளில் பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர். இதுவரை 24 பேர் வரை உயிரிழந்ததாக மீட்புப்படையினர் கூறியிருந்தாலும், பலரின் உயிர்கள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் கப்பலின் கேப்டன் முதல் ஆளாக தப்பித்து கரை சேர்ந்த விவகாரம் தென்கொரிய பத்திரிகைகளில் வெளிவந்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் கேப்டனின் பொறுப்பின்மை குறித்து ஊ

மேலும் இந்த கப்பலில் தென்கொரிய பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களுடைய பெற்றோர்கள் பெரும் கவலையுடன் கரையில் காத்திருக்கின்றனர். இந்த விபத்து காரணமாக பள்ளி நிர்வாகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பள்ளியின் துணை பிரின்சிபால் 52 வயது Kang Min-gyu என்பவர் சற்று முன்பு தனது வீட்டிற்கு எதிரேயுள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. நூற்றுக்க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்தான் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தியவர் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

9a

Leave a Reply