கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ. 82,000 பேர் வீடுகளை இழந்தனர்.

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ. 82,000 பேர் வீடுகளை இழந்தனர்.

FIREஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் கடந்த சில நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 82 ஆயிரம் தங்கள் வீடுகளை இழந்து தங்களது இருப்பிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் மத்திய கலிபோர்னியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள மலையோர காட்டுப் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ, மெல்ல, மெல்ல பரவி சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இதுவரை அழித்துவிட்டது. மேலும் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம் தீய்ந்தும், கருகியும் காணப்படுவதால் இந்த பகுதியின் விவசாயம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 700-க்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்தபோதும், கட்டுக்கடங்காத காற்று காரணமாக தீ படுவேகமாக பரவி வருகிறது.

Leave a Reply