வழக்கமாக ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள், அந்த தேதியில் பயணிக்க முடியாவிட்டால், அதை ரத்து மட்டுமே செய்ய முடியும்.அந்த டிக்கெட்டில் வேறும் யாரும் பயணம் செய்ய முடியாது.
இந்நிலையில், தற்போது ஏற்கனவே ஒருவர் பெயரில் எடுக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட்டில், வேறொரு நபர் பயணிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் முன்பதிவு செய்து எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை, அவரது குடும்பத்திலுள்ள வேறு ஒருவரது பெயரில் மாற்றி பயணிக்கலாம். இதற்காக, குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே, ரயில்வே மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர் என்பதற்கு ரேஷன் கார்டு போன்ற அடையாள ஆவணங்களின் நகலை கொடுக்க வேண்டும். இவ்வாறு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.