மத்திய அரசு தென்னிந்தியாவை ஒதுக்குகிறதா?
தமிழகம் உள்பட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு வலுவடைந்து வரும் நிலையில் மத்திய அரசு தென்னிந்தியாவை ஒதுக்குவதாக கூறப்படுகிறது
இதனையடுத்து நிதி பகிர்மானம், சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவகாரங்களில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது
தமிழகம் உட்பட அனைத்து தென் மாநிலங்களும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் இதனை தொடங்கி வைத்த நிலையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அந்த நெருப்பை பிடித்துக் கொண்டன. தமிழக அரசும் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தது
இது தொடர்பாக கலந்தாலோசித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தென் மாநிலங்களின் வருவாய் மூலம் பெறப்படும் வரியை வடமாநிலங்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க ஆலோசனை செய்யப்பட உள்ளது.
southern states accuse centre for share of tax revenue