வெடித்து சிதறியது நாசா அனுப்பிய ராக்கெட். பலகோடி இழப்பு
கடந்த வாரம் இந்திய விஞ்ஞானிகள் 104 செயற்கைக்கோள்களுடன் கூடிய ராகெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில் இன்று அமெரிக்காவின் விண்வெளி அமைபான நாசா ஏவிய ராக்கெட் கிளம்பிய ஒருசில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் அந்நாட்டு விஞ்ஞானிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
விண்வெளி நிலையத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்காக, நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து அவ்வப்போது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட், கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் செலுத்துவதை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று கிளம்பியதும் வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராக்கெட் தோல்வி அடைந்ததால் பலகோடி நஷ்டம் என்பதோடு, விண்வெளியில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு போய் சேர்க்க முடியுமா? என்பதிலும் சந்தேக நிலை ஏற்பட்டுள்ளது.