செவ்வாய் கிரகத்திற்கு தனியார் நிறுவனம் அனுப்பவுள்ள புதிய விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு தனியார் நிறுவனம் அனுப்பவுள்ள புதிய விண்கலம்
mars
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’என்ற நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு புதிய விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் இந்த விண்கலத்தை தயாரிக்க ‘நாசா’ ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கு ஆய்வு செய்ய உள்ளதாக நாசா அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’என்ற தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு அதிநவீன் விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம்தான் செவ்வாய் கிரகத்தில் ஆட்களை குடியமர்த்த போவதாக ஏற்கனவே கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக 2018ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாத விண்கலத்தை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அனுப்பவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் முஸ்ன் அறிவித்துள்ளார்.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ‘ரெட் டிராகன்’ என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் ராக்கெட் மூலம் இது அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தை வடிவமைக்க ஒத்துழைப்பு அளிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

தற்போது ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகம் மற்றும் வீரர்களுக்கு தேவையான பொருட்களும், உணவும் அனுப்பபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு (2017) இறுதியில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ஆட்களை அனுப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply