ஸ்பெயின் கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து. 5 நகரங்கள் பாதிப்பு

spainஸ்பெயின் நாட்டில் உள்ள கட்டாலோனியா என்ற பகுதியில் இருந்த கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து காரணமாக அங்கிருந்து எழும்பிய ஆரஞ்சு நிற புகை ஒரு பெரிய மேகம் போல் உருவெடுத்து அப்பகுதி மக்களை பயமுறுத்து வருகிறது. மிகவும் வீரியமிக்க கெமிக்கல் கலந்த புகை என்பதால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கெமிக்கல் வாயு காரணமாக அந்த பகுதியில் உள்ள சுமார் 65000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தீவிபத்தில் கெமிக்கல் தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் மரணம் அடைந்தனர். இந்த தொழிற்சாலையில் இருந்து எழும்பிய கெமிக்கல் கலந்த புகை சுமார் ஐந்து நகரங்களை பாதித்துள்ளது என்றும், 40 மைல்கள் தூரத்திற்கு இந்த பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீயை அணைக்க அந்த பகுதியின் தீயணைப்பு வீரர்கள் முகத்தில் கவசத்துடன் போராடி வருகின்றனர். விபத்து நடந்த பகுதிக்கு மருத்துவர்கள் விரைந்துள்ளனர். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த புகையால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

spain 1 spain 2 spain 3 spain 4 spain 5 spain 6 spain 7 red

Leave a Reply